ADVERTISEMENT

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய சமூகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்!

12:19 PM Feb 08, 2020 | Anonymous (not verified)

தேனி மாவட்டம், போடியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். போடி அரண்மனை கட்ட பொம்மன் சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் தேவர்சிலை சென்றடைந்து மீண்டும் அரண்மனைக்கு வந்தடைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



அதன் பின் அரண்மனையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியும் சிறப்பு பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தொடர் போராட்டங்களை அறிவித்த போடியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக அமைதி ஊர்வலம், வாயில் கருப்பு துணி கட்டி ஊர்வலம், கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம், விரதமிருந்து ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதை தொடர்ந்து 1500 மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் மத்திய அரசும் மாநில அரசும் இஸ்லாமியருக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதை தவிர்த்து தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற்று இந்திய ஒரு ஜனநாயக நாடு என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இப்படி திடீரென இஸ்லாமிய சமூகத்தினரின் போராட்டத்தில் குதித்ததால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT