ADVERTISEMENT

அரசு காப்பகத்திலிருந்து சிறுமிகள் தப்பியோடியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

11:36 PM Feb 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பியோடியது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய, வேலூர் அரசு காப்பகக் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து தப்பியோடிய தனது 16 வயது மகளைக் கண்டுபிடித்து தரக்கோரி, அச்சிறுமியின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இரு பெண்கள், 4 சிறுமிகள் தப்பியோடியது குறித்து காப்பகக் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், பாகாயம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளபோதும், தன் மகள் உள்ளிட்ட சிறுமிகளைக் கண்டுபிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் அமர்வு, சிறுமிகள் தப்பியோடியது குறித்து மார்ச் 16- ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, வேலூர் அரசு காப்பகக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில் மனுதாரரின் மகள் கிடைத்துவிட்டால், வேலூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT