ADVERTISEMENT

ஈவு இரக்கமற்ற தாய்: பச்சிளம் சிசுவை சாலையில் வீசிய கொடூரம்

05:24 PM Aug 25, 2018 | rajavel


பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சென்னை வளசரவாக்கம் எஸ்.வி. எஸ். நகர் 6-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் கடந்த 15 ஆகஸ்ட் 2018 புதன்கிழமை பச்சிளம் குழந்தை அழுதபடி கிடந்தது. குழந்தையின் அழும் குரல் கேட்டு பொதுமக்கள் கூடினர். இங்குள்ள தரைதள வீட்டில் சின்னத்திரை நடிகையான கீதா வசித்து வருகிறார். சத்தம் கேட்டு அவரும் ஓடி வந்தார். குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. நடிகை கீதா தரையில் படித்தபடி அங்கு இருந்த ஆண் குழந்தையை மீட்டார்.

ADVERTISEMENT

குழந்தையின் கழுத்தில் அதன் தொப்புள் கொடி சுற்றியபடி காணப்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை பெற்றோர் வீசி சென்றிருப்பது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து குழந்தையை நடிகை கீதா வெந்நீரில் குளிப்பாட்டி முதலுதவி செய்தார். சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு ‘சுதந்திரம்’ என்று கீதாவும், பொதுமக்களும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

மழைநீர் கால்வாயில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் மறைவதற்குள், சென்னையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 6-வது தெருவில் 25.09.2018 சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் நடுரோட்டில் பிறந்து சில மணி நேரம் ஆன பச்சிளம் ஆண் குழந்தை கீழே கிடந்தது. இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்கள் கூடினர். குழந்தையை கையில் தூக்கி பார்த்தபோது அந்த குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் கண் கலங்கினர். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை உடலை நடுரோட்டில் வீசியது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

அப்பகுதியை சேர்ந்த யாராவது குழந்தை உடலை வீசினார்களா? அல்லது வேறு பகுதியில் இருந்து வந்து வீசி சென்றார்களா? அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இதுதொடர்பான சம்பவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT