ADVERTISEMENT

பிரதமரின் தமிழ்நாட்டுப் பயணத்தில் முதல்வரின் பரிசு; வைரலாக்கும் நெட்டிசன்கள்

05:14 PM Apr 08, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி தமிழகத்தில் ரூ.5000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

முன்னதாக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமருக்கு விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். மோடியின் வருகையால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் தமிழ்நாட்டுப் பயணங்களை குறித்து அ.ராமசாமி எழுதிய Gandhi's Travels in Tamilnadu எனும் புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

இப்புத்தகம் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பின், 1896 ஆம் ஆண்டில் இருந்து 1946 வரை தமிழ்நாட்டிற்கு வந்த பயணங்களை உள்ளடக்கியது. இப்புத்தகத்தை எழுதியுள்ள அ.ராமசாமி நாடு முழுவதும் பயணம் செய்து, காந்தியுடன் தொடர்புடையவர்களைச் சந்தித்து கடிதப் பரிமாற்றம் செய்து அரசாங்க ஆவணங்கள், கடிதங்கள், புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் முக்கியமான மற்றும் சுவாரசியமான விவரங்களை சேகரித்து இப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் பிரதமருக்கு பரிசாக கொடுத்த புகைப்படத்தையும் புத்தகத்தின் புகைப்படத்தையும் இணையத்தில் பதிவிட்டு நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT