ADVERTISEMENT

ஆறாம் வகுப்பு மாணவியிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர்!

06:19 PM Oct 15, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15/10/2021) ஆறாம் வகுப்பு மாணவி பிரஜ்னாவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஓசூர், டைட்டன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த ரவிராஜன் - உதயகுமாரி ஆகியோரின் மகள் பிரஜ்னா, பள்ளிகளைத் திறக்கும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தொலைபேசி எண்ணிற்கு இன்று (15/10/2021) தொடர்புகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், நவம்பர் 1ஆம் தேதி அன்று பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், அப்படித் திறக்கப்படும்போது, அம்மாணவி பள்ளிக்கு செல்லலாம், கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியதோடு, ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தி, நன்றாகப் படிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT