ADVERTISEMENT

மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி...

01:18 PM Jan 30, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை (31.01.2021) நள்ளிரவுடன் நிறைவடைகிறது என்பதால், அதற்கான அரசாணை இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொரானா பரவல், பெரும்பாலான மாவட்டங்களில் ஒற்றை இலக்கிற்கு குறைந்துள்ள நிலையில், நோயை முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் தமிழக அரசு உலக சுகாதர அமைப்பின் ஆலோசனையுடன் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

இதற்காக, ஜெனிவாவில் இருந்து உலக சுகாதர அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் காணொளி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்றார். இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

நோயை முழுமையாக கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கை நீட்டிக்கலமா அல்லது நீக்கலமா என்பவை குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT