ADVERTISEMENT

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை

08:41 AM Oct 30, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா மற்றும் 61வது குருபூஜை பசும்பொன்னில் இன்று (30.10.2023) நடைபெற உள்ளது. இதில், தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மதுரை மேயர் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். முதல்வருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் எனப் பலரும் மரியாதை செலுத்துகின்றனர்.

அதேபோன்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வருகை தர உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT