ADVERTISEMENT

"தைரியமா இரு... அப்புறம் வந்து பாக்குறேன்.." - சிறுமியிடம் நெக்குருகிய முதல்வர்!

10:21 PM Aug 29, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ்- சௌந்தர்யா தம்பதியினர். இவர்களது 9 வயது மகள் தானியா. வீராபுரம் அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயது வரை சராசரி குழந்தையாக இருந்த தானியாவின் கன்னத்தில் கரும்புள்ளி ஒன்று தோன்றியது. இதனை ரத்த கட்டி என பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நிலையில் நாளடைவில் அந்த புள்ளி பாதி முகத்தை சிதைக்கும் அளவிற்கு உருவானது. உடனே பெற்றோர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்த பாதிப்பு அவரது கண், கன்னம், வாய் என முகத்தின் பாதியை சிதைத்துவிட்டது. தங்களது சக்திக்கும் மீறி பல இடங்களில் கடன் வாங்கி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைகளை தொடங்கிய நிலையில் அதுவும் கைகொடுக்கவில்லை.


பள்ளி செல்லுகையிலும், டியூசன் செல்லுகையிலும் சிறுமி தானியாவை சக மாணவர்களே ஒதுக்கி வைப்பது தானியாவிற்கு மனச்சுமையை ஏற்படுத்தியது. இதனால் வீட்டிற்கு வந்தவுடன் அழுவதாக சிறுமியின் தாய் சௌந்தர்யா தெரிவிக்கிறார். எப்படியாவது எங்கள் குழந்தையை அரசு மீட்டுத்தர வேண்டும். மற்ற குழந்தைகளை போல எங்கள் குழந்தையும் இருக்க வேண்டும். அதற்கு முதல்வர் உதவி வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தனர் தானியாவின் பெற்றோர். இந்நிலையில் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனைக்கு சென்றுள்ள முதல்வர் அச்சிறுமியிடம் நேரில் நலம் விசாரித்தார். மேலும் சிறுமியிடம் பேசிய முதல்வர் நலம் பெற்ற உடன் தான் மீண்டும் சந்திப்பதாக உறுதியளித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT