ADVERTISEMENT

தலைமைக் காவலர் ரேவதியிடம் காணொலிக் காட்சி மூலம் பேசிய நீதிபதிகள்!

03:40 PM Jul 02, 2020 | rajavel

ADVERTISEMENT

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், எஸ்.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜ், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவர்கள் மீது கொலை வழக்குகளைப் பதிவு செய்துள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதிய பாதுகாப்பை உறுதி செய்து தலைமைக் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், தலைமைக் காவலர் ரேவதியிடம் உடனே பேச வேண்டும் என்று சொல்ல அடுத்த நிமிடம் காணொலிக் காட்சி மூலம் ரேவதியிடம் நீதிபதிகள் தொடர்புகொண்டு, எப்படி இருக்கீங்க உங்களுக்குப் பாதுகாப்பு திருப்தி அளிக்கிறதா? என்றும் மேலும் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியதாகச் சொல்லப்படுகிறது . கொலை வழக்காக மாற முக்கியத் திருப்பமாக அமைந்தது தலைமைக் காவலர் ரேவதியின் சாட்சியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT