ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை கிர்ணி பழத்தால் தாக்கிய தீட்சிதர்கள்....!

10:11 AM Jan 11, 2020 | Anonymous (not verified)

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெற்றது. இதில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குள் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவபக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் தரிசனம் பார்ப்பதற்காக விரதமிருந்து காலையிலிருந்து கோவிலில் குவிந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



இதனால் கோவிலில் அதிகமான கூட்டம் இருந்தது. இந்தநிலையில் தீட்சிதர்கள் மாலை 5 .15 மணிக்குதான் தரிசனம் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதனால் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தார்கள். அப்போது திருவாரூரிலிருந்து வந்திருந்த ராதாலட்சுமி(57) என்ற பெண் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு செல்போனுடன் கையை மேலே தூக்கி உள்ளார். இதனை பார்த்த தீட்சிதர்கள் அவர் போட்டோ எடுக்கிறார் என்று அவரது முகத்தில் கிர்ணி பழத்தால் அடித்துள்ளனர்.

பழம் முகத்தில் பட்டு மயக்கம் அடைந்த அவர் அங்கேயே விழுந்து விட்டார். பிறகு பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து ஆறுதல் அடைய செய்துள்ளார். அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு முகம் வீங்கியுள்ளது. இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தீட்சிதர்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தரிசன விழா ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு மதியம் 2 மணிக்குள் தரிசனம் நடத்தப்பட்டன ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். மூன்று மணி நேரம் தாமதமாக நடத்தியதால் பொதுமக்கள் பக்தர்கள் கால் கடுக்க நின்று அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT