ADVERTISEMENT

விண்ணுக்கு செயற்கைகோள் அனுப்ப தேசிய அளவில் சிதம்பரம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

07:44 AM Dec 18, 2019 | kalaimohan

தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு குழு (NDRF) நடத்திய இந்திய அளவிலான செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டியை வலைதளம் (ஆன்லைன்) வாயிலாக நடத்தியது. இதில் செயற்கை கோளுக்கான பொருட்களை பரிந்துரைக்க வேண்டும். அது புதுமையாகவும், எளிமையானதாகவும் இருக்க வேண்டும். அந்த பொருள் 3.8 செ.மீ அளவிலான பெட்டியில் பொருந்தும் வண்ணம் அமைய வேண்டும் என்ற விதிமுறைகளை விதித்தது.

ADVERTISEMENT


போட்டியில் இந்தியா முழுவதிலிருந்தும் ஏறத்தாழ 3000 பள்ளிகள் பங்கேற்றள்ளனர். தமிழகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கெடுத்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள அரசு உதவிபெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் ஏறத்தாழ ஒன்பது பொருட்களை இந்த போட்டியில் பரிந்துரைத்துள்ளனர்.பரிந்துரை செய்த பொருட்களில் இரண்டை தேர்வு செய்து இருபொருட்குழுக்களை இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து 6 குழுக்கள் தேர்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதில் இரண்டு குழுக்கள் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் குழுக்கள் என்பது குறிப்பிடதக்கது.

முதல் குழுவின் தலைவர் .ராகுல் சிமென்டை விண்வெளிக்குஅனுப்ப பரிந்துரை செய்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் சிமென்டால் கட்டப்பட்ட சுவரையோ, தளத்தையோ இடித்து நிலத்தில் போட்டு விடுகிறோம். அதன் மூலம் மழைநீர் மண்ணுக்குள் இறங்குவது தடுக்கப்படுகிறது. இதுவும் பிளாஷ்டிக் போல் மழைநீரை பூமிக்கு அனுப்பாது.

ADVERTISEMENT


அதனால் விண்ணுக்கு சிமெண்டை அனுப்பி அங்குள்ள மாற்றத்தை ஆராய்வதன் மூலம் இங்குள்ள கான்கிரீட் கழிவுகளை அழிக்கவோ மறுசுழற்சி செய்வதற்கான வழிகளை ஆராய முடியும் என்றார். இந்த குழுவில் .வசந்தபிரியன், .நவீன்ராஜ் ,.கீர்த்திவாசன், .சூர்யா ஆகியோர் உள்ளனர்.

இரண்டாம் குழுவின் தலைவர் ரகுராம் கூறுகையில் பென்சிலின் என்ற உயிர் எதிர் பொருளை(ஆன்டிபயோடிக்) அதில் அனுப்ப இருக்கிறோம். விண்வெளியில் தங்கி ஆராய்ச்சிகள் செய்யும் வீரர்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் புவியிலிருந்து இராக்கெட் மூலமாக அனுப்பப்படுகிறது. மாற்றாக இத்தகைய உயிர் எதிர்பொருளை அங்கேயே உருவாக்க முடிந்தால் நேரம் மற்றும் பொருட்செலவு பெருமளவில் குறையும். இதற்கான ஆய்வு செய்வதற்கு பென்சிலின் என்ற பூஞ்சையை விண்ணுக்கு அனுப்புகிறோம். இந்த குழுவில் தமிழ்மன்னன், சிவா, சுதர்சன் அகமதுகான் ஆகியோர் உள்ளனர்.

இதில் மாணவர்களுக்கு உதவியாக அனைத்து உதவிகளையும் வழிகாட்டியாய் பள்ளியின் கணித ஆசிரியர் வேல்பிரகாஷ் செய்து வருகிறார். தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் செயலாளர் அருள்மொழிச்செல்வன், தலைமை ஆசிரியர் தையல்நாயகி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.

தேர்வு செய்யப்பட்ட பொருட்களை செயற்கைகோள் உதவியுடன் சென்னை சிறுசேரியில் இருந்து வரும் ஜனவரி 19-ந்தேதி விண்ணுக்கு அனுப்பவுள்ளனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT