ADVERTISEMENT

வடபழனி பேருந்து நிலைய பணிமனையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு!

09:14 AM Jul 28, 2019 | santhoshb@nakk…

சென்னை வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவில் ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு அமர்ந்து இருந்தனர். அப்போது பணிமனைக்கு வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் பணிமனை ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சேகர், பாரதி என்ற 2 ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார் போக்குவரத்துக்கு பணிமனை அதிகாரி கணேசன். அதனை தொடர்ந்து போக்குவரத்து துறை செயலர் ராதாகிருஷ்ணன் படுகாயமடைந்த ஊழியர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து செயலர், சென்னையிலுள்ள 32 பணிமனைகளில் 16 பணிமனைகளை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் உயிரிழந்த இரு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போல் படுகாயம் அடைந்த ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கூறினார். வடபழனி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 ஊழியர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பேருந்துகள் தரமாக இல்லை என எதிர்ப்பு தெரிவித்து, பணிமனை ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT