ADVERTISEMENT

பிரதமர் மோடியும், அமித்ஷாவும், அர்ஜுனன்...கிருஷ்ணன் போன்றவர்கள்- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு! 

12:03 PM Aug 11, 2019 | santhoshb@nakk…

இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியிட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வெங்கையா நாயுடு சிறந்த ஆன்மீகவாதி தப்பித்தவறி அரசியல் வாதி ஆகிவிட்டார். எந்நேரமும் மக்களை பற்றி சிந்திப்பவர் வெங்கையா நாயுடு என ரஜினிகாந்த் புகழாரம். அதனை தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தை திறன்பட கையாண்டது பாராட்டுக்குரியது.

ADVERTISEMENT

ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாராட்டினார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித்ஷாவின் நாடாளுமன்ற உரை சிறப்பானது என குறிப்பிட்டு பேசினார். காஷ்மீரை இரண்டாக பிரிப்பது தொடர்பான நடவடிக்கை சிறப்பானது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷாவை பாராட்டி ரஜினிகாந்த் பேசினார். மேலும் அமித்ஷாவும், நரேந்திர மோடியும் அர்ஜுனன், கிருஷ்ணன் போன்றவர்கள் , இதில் அர்ஜுனன் யார்? கிருஷ்ணன் யார்? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றார்".

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT