ADVERTISEMENT

"அவ்வளவு தானா சஸ்பென்ட் நடவடிக்கை..? ஒரே மாதத்தில் பணிக்கு திரும்பிய ஆய்வாளர்...!"

06:33 PM Dec 23, 2018 | nagendran

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை தேனாம்பேட்டையில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன், சக காவலரை கீழே தள்ளிவிட்ட சம்பவத்தில் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், 30 நாட்களுக்குள்ளேயே அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த கொடூரமான சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். "நவ.21-ந்தேதி பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் தருமன், தனது தாயாரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மேலதிகாரியான ஆய்வாளர் ரவிச்சந்திரன் விடுப்பு தர மறுக்கிறார் என மது போதையில் மைக்கில் பேச, அது சிட்டி முழுக்க எதிரொலித்தது." இதையடுத்து டி.சி, ஜே.சி உள்ளிட்ட மேலதிகாரிகள் ரவிச்சந்திரனிடம் கடுமை காட்டியதோடு, தருமனுக்கு விடுப்பு கொடுத்ததோடு, கட்டுப்பாட்டு அறையில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தம்மை மாட்டிவிட்ட தருமனை பழி வாங்க, அவர் போதையில் இருந்தார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக காத்திருந்த ரவிச்சந்திரன், வீடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தருமனை மடக்கிப் பிடிக்க, அவர் கீழே நிலைதடுமாறி விழுந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இந்த காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலானது.

இந்த சம்பவத்தில் அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய தருமன், தற்போது வரை மருத்துவ விடுப்பில் உள்ளார். சஸ்பென்ட் நடவடிக்கையில் இருந்த ரவிச்சந்திரனுக்கு, இப்போது அம்பத்தூரில் ஆய்வாளர் (போக்குவரத்து) பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படி எனில் விசாரணை நடத்தியது எல்லாம் கண் துடைப்பா? தப்பு செய்தால் இடமாற்றம் மட்டும் தான் தண்டனையா? என்று கீழ் மட்டத்தில் உள்ள காவல் ஆளினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT