ADVERTISEMENT

வெற்றி தலைக்கேறியுள்ளது... -சீனிவாசன்

07:48 AM Aug 31, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சில நேரங்களில் வெற்றி தலைக்கேறும்போது இப்படி நிகழும் என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி - துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் தோனிக்கு தந்ததை போல் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாததால் ரெய்னா அதிருப்தியில் இருந்ததாகவும், கரோனா விதிமுறைகள் காரணமாக அறையை உடனே மாற்ற முடியாது என சென்னை அணி நிர்வாகம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் தோனி அறிவுரைப்படி சென்னையில் நடந்த முகாம் பற்றியும் அணி நிர்வாகத்திடம் ரெய்னா கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கரோனா உறுதியானதால் ரெய்னா அச்சமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. பஞ்சாப்பில் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதால் ரெய்னா ஊர் திரும்பியதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பற்றி கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், ‘சில நேரங்களில் வெற்றி தலைக்கேறும்போது இப்படி நிகழும்; ஐபிஎல் தொடங்கவில்லை; ரூபாய் 11 கோடி வருமானத்தை ரெய்னா இழப்பார் என்பதால் அவர் தவறை உணருவார். சிஎஸ்கே என்பது ஒரு குடும்பம் போன்றது; சீனியர் வீரர்கள் எப்போதும் இணைந்தே இருப்பார்கள். யாருக்கு பிடிக்கவில்லையோ, யாருக்கு மகிழ்ச்சியில்லையோ அவர்கள் தாராளமாக திரும்பி செல்லலாம். தோனியுடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன்; தொற்று எண்ணிக்கை உயர்ந்தாலும் கவலை வேண்டாம் என கூறினார். காணொளியில் வீரர்களிடம் பேசிய தோனி அவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்'. இவ்வாறு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT