ADVERTISEMENT

சம்மன் வாங்காத தயாநிதி மாறனுக்கு புதிய சம்மன்! -அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கில் உத்தரவு!

08:23 AM Dec 27, 2019 | santhoshb@nakk…

தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழங்கிய சம்மனை தயாநிதிமாறன் வாங்கவில்லை என, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு, பஸ் டிக்கெட் விலையை உயர்த்தியதைக் கண்டித்து, 2018 ஜனவரி 29- ஆம் தேதி, தயாநிதிமாறன் தலைமையில் தி.மு.க.,வினர், சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இது தொடர்பாக, சேத்துப்பட்டு காவல்துறையினர், தயாநிதிமாறன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஆஜராகுமாறு, தயாநிதிமாறன் உட்பட 20 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், தயாநிதிமாறனைத் தவிர, 19 பேர் நீதின்றத்தில் ஆஜராகினர். தயாநிதிமாறனுக்கு சம்மன் கொடுத்தால் தயாநிதிமாறன் தரப்பில் வாங்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையைடுத்து, மீண்டும் புதிய சம்மன் வழங்க, போலீசாருக்கு உத்தரவிட்டு, ஜனவரி 8- ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT