முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துக்களை கடந்த 2015- ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் ரூ.4.25 கோடி என்ற விலைக்கு விற்பனை செய்தனர். சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

Advertisment

karthi chidambaram income tax case chennai special court judgement soon

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடி மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் ரூ.1.35 கோடி ஆகியவை வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை என்று அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த மனு மீது 30- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்துள்ளார்.