ADVERTISEMENT

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத சென்னை ரிசர்வ் வங்கி ஊழியர்கள்... வாக்குவாதத்தால் சலசலப்பு!

04:49 PM Jan 26, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது ஊழியர்கள் சிலர் எழுந்து நிற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என அண்மையில் வழக்கு ஒன்றில் நீதிபதி தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்த, அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும். அதேபோல் கருவிகளில் இசைக்கப்படாமல் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் குடியரசு தினமான இன்று சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. குடியரசு தின விழா முடிந்த பிறகு ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என சிலர் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை' என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வாதிட்டனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று உரிய மரியாதை வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து சலசலப்பு முற்றுப்பெற்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT