ADVERTISEMENT

சென்னையில் பெட்ரோல் ரூபாய் 8.22, டீசல் ரூபாய் 6.70 குறைவு! 

08:18 AM May 22, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 8.22, டீசல் ரூபாய் 6.70 விலை குறைப்பு அமலுக்கு வந்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நேற்று (21/05/2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் இன்று விலை குறைந்தது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், நாடு முழுவதும் எரிபொருள் விலை குறைந்தது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் நேற்று (21/05/2022) மத்திய அரசு குறைத்து அறிவிப்பை வெளியிட்டது.

புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 8.49 குறைந்து 96.16 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 6.69 குறைந்து 86.33 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT