ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் கூடுதலாக பொங்கல் பரிசுத்தொகை வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

08:45 AM Dec 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

பொங்கல் பரிசுத்தொகை 2,500 ரூபாயில் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் கூடுதலாக வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பொருட்களுடன் தலா 1,000 ரூபாயை தமிழக அரசுவழங்கியது. அதேபோல அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரூபாய் 2,500 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். இந்தப் பொங்கல் பரிசு தொகையை, மாற்று திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் கூடுதலாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், அதன் மாநிலப் பொதுச் செயலாளர் நம்புராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ‘சமூக நலத் திட்டங்கள் மற்றவர்களுக்கு வழங்கும் மானியத்தைவிட, மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 கூறுகிறது. எனவே, சட்டத்தின்படி 25 சதவீதம் மானியம் அதிகம் வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். டிசம்பர் 21- ஆம் தேதி அறிவித்த 2,500 ரூபாயுடன், கூடுதலாக 25 சதவீதம் வழங்கவும், அதைத் எங்களின் வங்கி கணக்குகளில் செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் அமர்வில், இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT