ADVERTISEMENT

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு! 

02:42 PM Dec 02, 2019 | santhoshb@nakk…

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளுக்கு மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

ADVERTISEMENT


இதனால் சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் எரிக்கு நீர்வரத்து 1,923 கனஅடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது நீர்மட்டம் 11.20 அடியாக உள்ளது. இந்த ஏரியில் நீர் இருப்பு 749 மில்லியன் கனஅடியில் இருந்து 913 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் புழல் ஏரிக்கு நீர்வரத்து 1,500 கனஅடியில் இருந்து 2,161 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் பூண்டி ஏரியில் நீர்வரத்து 1,042 கனஅடியில் இருந்து 2,925 அதிகரித்துள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT