ADVERTISEMENT

ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 676 ஆக அதிகரிப்பு!

12:06 PM May 11, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டதவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,959 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 47 பேர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

குறிப்பாகச் சென்னையில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எந்தெந்த பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

அதன்படி, சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் நேற்று (10/05/2020) ஒரேநாளில் 105 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் திரு.வி.க. நகரில் மேலும் 37 பேருக்கு கரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 556 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் திருவொற்றியூர் 84, மாதவரம் 54, தண்டையார்பேட்டை 274, அம்பத்தூர் 205, தேனாம்பேட்டை 412, வளசரவாக்கம் 319, அண்ணாநகர் 301, அடையாறு 175, பெருங்குடி 36, சோழிங்கநல்லூரில் 28, ஆலந்தூர் 29, மணலி 42 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 18 பேர் என மொத்தம் 3,839 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 3,839 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 743 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 3,050 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT