ADVERTISEMENT

கோயம்பேட்டிலிருந்து கடலூர் திரும்பிய 7 பேருக்கு கரோனா!

08:11 AM May 02, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT


இந்த நிலையில் கோயம்பேடு சந்தையிலிருந்து சொந்த ஊரான கடலூர் திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு கரோனா உறுதியானது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன. மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

அதேபோல் கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர், பெரம்பலூர் வந்த 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூரைச் சேர்ந்த 19 பேரும், பெரம்பலூரைச் சேர்ந்த ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேட்டில் வேலைபார்த்த 40 பேருக்கு ஏற்கனவே கரோனா உறுதியான நிலையில், இன்று ஒரே நாளில் சுமார் 27 பேருக்கு உறுதியாகி உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT