ADVERTISEMENT

திருமணம் செய்யாமல் ஏமாற்றும் இளைஞர்! காவல்நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்!

11:27 AM Jun 22, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகையில் வரதட்சணை அதிகம் கேட்டு நிச்சயம் முடித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுக்கும் மாப்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நிச்சயதார்த்த புகைப்பட ஆல்பத்துடன் மகளிர் காவல் நிலைய வாசலில் பாதிக்கப்பட்ட பெண் அவரது குடும்பத்தினரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்மார்க்கம். இவரின் மூத்த மகளுக்கும், நாகை அடுத்துள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார் விஜயா தம்பதியின் மகன் சரவணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வில் ஜூன் 17ஆம் தேதி திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், சரவணன் மேற்கொண்டு திருமணத்திற்கான எந்தவித வேலையையும் துவங்காமல் தொடர்ந்து அலட்சியமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிச்சயதார்த்த விழா நடத்தினோம் அதோடு, அவசர தேவைக்காக 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவருக்கு கொடுத்தோம், ஆனால் திருமணத்திற்கான எந்த வேலையும் செய்யாமல் எங்களை ஏமாற்றி வருகிறார் சரவணன். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறையினர் ஏனோ புகாரை வாங்க மறுத்துவருகின்றனர். அதனால் நானும் எங்கள் குடும்பத்தினரும் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்றனர்.

தர்னாவில் நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துக்கொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். நிச்சயம் முடிந்து திருமணம் செய்துகொள்ள மறுக்கும் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT