wife passed away police arrested her husband in nagapattinam

Advertisment

இரண்டு மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில், மதுபோதையில் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்து கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம், நாகூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிங்காரவேல் முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், முதல் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது. மற்ற இரண்டு பெண் பிள்ளைகளும் காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அவமானத்தில் ஆத்திரமடைந்து சில வருடங்களாக மனைவி முத்துலட்சுமி மீது, கோபத்தில் இருந்து வந்த கணவர் சிங்காரவேலு தினமும் இரவில் மதுபோதையில் வந்து மனைவியை திட்டியும் அடித்து துன்புறுத்தியுமே இருந்துவந்துள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல நேற்று இரவும் மது போதையில் வந்த சிங்காரவேலு, மனைவி முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவி முத்துலட்சுமியை “எனது மகள்கள் ஓடிப்போக நீதான்டி காரணம்” என கூறி தலையில் கட்டையால் அடித்தே கொலை செய்திருக்கிறார் சிங்காரவேலு.

Advertisment

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் அங்கு மறைந்திருந்த சிங்காரவேலுவை கைது செய்துள்ளனர். முத்துலட்சுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.