ADVERTISEMENT

‘11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

04:28 PM Nov 15, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 986 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் உள்ளன. அதே சமயம் 170 வகையான பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் மீட்புப் படை தயாராக இருக்க, போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT