ADVERTISEMENT

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

08:19 AM Dec 25, 2023 | kalaimohan

சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் பொழிந்த அதீத கன மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது. தற்பொழுது படிப்படியாக மீண்டு வரும் நிலையில் சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 46 கன அடியாக உள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்பொழுது 3,004 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. குடிநீருக்காக 159 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 கன அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கனடியில் 727 மில்லியன் கன அடி நீர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து முக்கிய ஏரிகளில் 89.66% நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் 10.542 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT