ADVERTISEMENT

கஜா புயலுக்கு மத்திய அரசின் முதல்கட்ட நிவாரண நிதி ;200 கோடி??!!

11:29 AM Nov 25, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை பலத்த சேதத்துக்கு உட்படுத்திய கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு முதல்கட்டமாக 200 கோடி வழங்கியுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி கரையை கடந்த கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு புயலால் சேதமடைந்த வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் போன்றவை அரசு ஊழியர்களால் சரி செய்யப்பட்டு வருகிறது.

அன்மையில் கஜா புயல் சேத அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து சமர்ப்பித்து நிவாரண நிதியாக 13 ஆயிரம் கோடியும் உடனடி நிவாரண நிதி தொகையாக 1500 கோடியும் மத்திய அரசிடம் கோரியிருந்தார்.

இந்நிலையில் தற்போது புயல் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு முதற்கட்டமாக மின்வாரியத்திற்கு 200 கோடி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்பால் சேதமடைந்த ஊரகப் பகுதிகளுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT