ADVERTISEMENT

மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல்.. கி.வீரமணி எச்சரிக்கை!

01:59 PM Apr 19, 2018 | Anonymous (not verified)

பன்வாரிலால் புரோகித் போன்ற பெரிய மனிதர்கள் ஆளுநர் பதவியில் தொடர்வது விரும்பத்தக்கதல்ல. மத்திய அரசு அவரைத் திரும்பி அழைத்திடவேண்டும். வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு! என்ற குரலும், அறவழிக் கிளர்ச்சிகளும் தவிர்க்க இயலாதவையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆளும் அ.தி.மு.க. - பா.ஜ.க. தவிர...

தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனியே ஒரு இணை அரசாங்கத்தினை - மாநில அரசின் அரசியல் சட்ட நடைமுறை - மரபுகளை மீறி தானே எல்லாம் என்ற போக்கில் நடத்தி வருவதற்கு திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் (ஆளும் அ.தி.மு.க. - பா.ஜ.க. தவிர) தங்களது ஜனநாயக ரீதியான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன!

முன் எப்போதும் நடந்திராத முறையில் ஆளுநரே துணைவேந்தர் பதவிகளுக்கு ராஜ்பவனில் நேர்காணல் நடத்தும் முறையும், நியமிக்கப்படும் துணைவேந்தர்களின் நியமன ஆணையை ஆளுநரே அழைத்து சம்பந்தப்பட்டவரிடம் வழங்குவதுமான புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது.

பா.ஜ.க. ஆட்சியில் (மோடி அரசால்) நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்களில் இப்படி பெண்களிடம் கிருஷ்ண லீலைகள் நடத்தியதுபற்றி மேகாலயா ஆளுநராக இருந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியான சண்முகநாதன் என்பவர்மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து, அவரை ராஜினாமா செய்யச் சொல்லி, கமுக்கமாக வெளியே அனுப்பிவிட்டது மோடி அரசு.

இதுபோன்ற நிகழ்வுகள், தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை மிகவும் வெட்கப்படவேண்டியவை. வயதானவர்கள்தான் பெரும்பாலும் பாலியல் வக்கிரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு வெளிவந்த பல செய்திகளே சாட்சியாகும்!

தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு!வேலிகளே பயிரை மேயும் அவலம் தொடரலாமா?

தமிழ்நாட்டிற்கு இனிமேல் ஒரு கணமும் இந்த பன்வாரிலால் புரோகித் போன்ற பெரிய மனிதர்கள் ஆளுநர் பதவியில் தொடருவது விரும்பத்தக்கதல்ல. மத்திய அரசு அவரைத் திரும்பி அழைத்திடவேண்டும். வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு! என்ற குரலும், அறவழிக் கிளர்ச்சிகளும் தவிர்க்க இயலாதவையாகும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT