Skip to main content

நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் - கருத்தரங்கம்! திராவிடர் கழகம் அறிவிப்பு

Published on 31/03/2018 | Edited on 01/04/2018



 

parliament

 

நீட் உள்பட சமூகநீதிக்காக புதுடில்லியில் ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்றம்முன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் (ஜந்தர் மந்தர்) ஆர்ப்பாட்டமும், தொடர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் கருத்தரங்கமும் நடைபெற உள்ளதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு அமைப்புகளின் மாணவர்கள் பங்கேற்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. 
 

நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
 

நாள்: 03.04.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி
இடம்:ஜந்தர் மந்தர், நாடாளுமன்றச் சாலை, புதுடில்லி
தலைமை:  கி.வீரமணி அவர்கள்
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர்கள், அனைத் திந்திய அளவிலான நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், மாணவர்கள், சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவையைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளின் பிரதி நிதிகள் பங்கேற்கிறார்கள்.
 

சமூகநீதிக் கருத்தரங்கம்
 

நாள்: 03.04.2018 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி
இடம்: அவைத் தலைவர் அரங்கம், கான்ஸ்டிடியூசன் கிளப், நாடாளுமன்றம் அருகில், புதுடில்லி
 

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
 

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டுக் கொண்டுவருதல்
மருத்துவ உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக் கீட்டை முழுமையாக செயல்படுத்துதல்
மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு
மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு
பங்கேற்பாளர்கள்
 

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு:
 

ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடா ளுமன்ற உறுப்பினர், திராவிட முன்னேற் றக் கழகம்)
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
பெ.விசுவநாதன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ்)
அ.கணேசமூர்த்தி (மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர், பொருளாளர், மதிமுக)
தோழர் து.ராஜா (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
தோழர் டி.கே.ரங்கராஜன் (நாடாளு மன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-, மார்க்சிஸ்ட்)
குர்ரம் அனீஸ் உமர் (தேசிய செய லாளர், இந்திய யூனியன் முசுலிம் லீக்)
பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி)
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
மு.தமிமுன் அன்சாரி (சட்டப் பேரவை உறுப்பினர், பொதுச் செய லாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி)
கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி (மாநில தலைவர், எஸ்.டி.பி.அய்)
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்: கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா, வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி
 

அகில இந்திய அமைப்புகள்
 

பேராசிரியர் அனில் சட்கோபால் (கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர் AIFRTE)
தோழர் விசுவஜித் குமார் (பொதுச் செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்)
அகில இந்திய மாணவர் போராட்டக் கவுன்சில் (AICSS) பிரதிநிதிகள்,
 

மருத்துவர் அமைப்புகள்
 

டாக்டர் ஜி.ரவீந்திரநாத் (பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்)
டாக்டர் நந்தகுமார் (கூடுதல் செய லாளர், தமிழ்நாடு மருத்துவ அலுவ லர்கள் சங்கம்)
 

சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை
 

சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டப் பேரவை உறுப்பினர்,மாநில செயலா ளர்,திராவிட முன்னேற்றக் கழக மாண வரணி)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
தி.ஆ.நவீன் (பொறுப்பாளர், தமிழ் நாடு மாணவர் காங்கிரஸ்)
வழக்குரைஞர் செஞ்சுடர் (மாநில துணைச் செயலாளர், முற்போக்கு மாணவர் கழகம்)
புளியங்குடி எம்.முகமது அல் அமீன் (தேசிய இணைச் செயலாளர், முசுலிம் மாணவர் பேரவை)
நூருதீன் (மாநில செயலாளர், சமூகநீதி மாணவர் இயக்கம்)
எஸ்.முஸ்தபா (மாநில தலைவர், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா)
முகம்மது அசாருதீன் (மாநில செய லாளர், மாணவர் இந்தியா)
இளையராஜா (தலைவர், தமிழ்நாடு மாணவர் முன்னணி)
சிறீநாத் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி)
கா.அமுதரசன் (அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம்)
மற்றும் மாணவர் அமைப்புகள், சிறுபான்மை இயக்கங்கள், கல்வியாளர் குழுக்களின் பிரதிநிதிகள்.

சார்ந்த செய்திகள்

Next Story

''நீட்டையும், க்யூட்டையும் மியூட் செய்க''-கி.வீரமணி கண்டனம்!

Published on 06/04/2022 | Edited on 11/04/2022

 

K. Veeramani condemned!

 

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என  வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில் நீட் (NEET), க்யூட் (CUET) நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யுமாறு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

 

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், '2022-23 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பல்கலைக்கழக மானிய குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை நடத்துவதற்காக நுழைவுத்தேர்வு நடத்துகிறது. ஏற்கனவே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் நுழைவுத்தேர்வை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி இது.

 

மத்திய அரசின் பிற்போக்குத்தனமான இந்த நடவடிக்கை இதனை நிரூபணம் செய்கிறது. நீட் தேர்வை போல் பொதுப்பல்கலைக்கழக் நுழைவு தேர்வு நாடு முழுவதும் பள்ளிகல்வி முறைகளை ஓரங்கட்டிவிட்டு, மாநில பாடத்திட்டத்தின் அடிப்டையிலான பள்ளிகளின் மேம்பாடு சார்ந்த கட்டமைப்புகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுக்கும். இதனால் மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை மாணவர்கள் நாடும் சூழல் உருவாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கையை வெகுவாக குறைத்துவிடும். ஒன்றிய அரசின் இந்தபோக்கு மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கை என்றே கருதுகிறோம். எனவே மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும்'' என வலியுறுத்தப்பட்டிருந்தது. 

 

K. Veeramani condemned!

 

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும் (NEET) பொதுநுழைவு தேர்வான க்யூட் தேர்வையும் (CUET)  மத்திய அரசு மியூட் செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சமூகநீதி என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. விட்டால் தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் வரை மத்திய அரசு நுழைவுத்தேர்வை கொண்டு வரும் போல'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

"நீதிபதிகள் நியமனத்தில் அனைத்துக் கட்சியினரும் அழுத்தம் கொடுக்க கி.வீரமணி வலியுறுத்தல்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

supreme court and high court judges appointed related dravida kazhaka president statement

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும், மத்திய சட்ட அமைச்சரும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகத்தின் பன்முகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் நியமனம் நடைபெறுவது அவசியம் என்று கூறியுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அளவில் அழுத்தம் கொடுத்து செயல்முறைக்குக் கொண்டுவர ஆவன செய்யுமாறு வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (09/06/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ஒன்றிய சட்ட அமைச்சர் கருத்துப்படி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பெண்கள் ஆகியோருக்கு உரிய இடம் அளித்திடுக! அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு அழுத்தம் கொடுத்திடுக!

 

‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’ என்பது நீண்ட காலமாக அனைவரும் அறிந்த சொலவடையே! நமது நாட்டில் உள்ள உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் முழு எண்ணிக்கை 34; அதில் 7 நீதிபதிகளின் இடம் காலியாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றன இன்றைய நிலவரப்படி. அதுபோலவே இந்தியாவின் பற்பல மாநிலங்களிலும் உள்ள உயர்நீதிமன்றங்கள் மொத்தம் 25 ஆகும். அந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளில் நிரப்பப்படாத உயர்நீதிமன்ற நீதிபதிகளது இடங்கள் 430 (01/06/2021 தேதிப்படி). உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் என்.வி.இரமணா கருத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஜஸ்டீஸ் என்.வி.இரமணா அவர்கள் இந்த காலி இடங்கள் வெகுவிரைவில் நிரப்பப் பட வேண்டும். 

 

அதற்கான ஒத்துழைப்பைக் கோரி பற்பல உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளிடமும் மற்ற முக்கிய உயர் வட்டாரங்களிலும் பேசியது பற்றிய செய்திக் குறிப்பு ஒன்றில், ‘‘இந்த நீதிபதிகள் நியமனங்களில், நாட்டில் உள்ள பல்வேறுபட்ட பரவலான சமூக பன்முகத்தன்மையை மனதில் கொண்டு, (அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில்) நியமனங்கள் அமைவது அவசியம்‘’ என்ற கருத்தைக் கூறியுள்ளார்.

 

‘‘உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நிரப்பப் படவேண்டிய பதவிகளுக்குப் பரிந்துரைக்கையில், நாட்டில் உள்ள சமூக பன்முகத்தன்மையை அவை பிரதிபலிப்பதாகக் கொண்டு செய்வது உசிதம்‘’ என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

 

காலத்தின் கட்டாயமும், அரசியல் சட்டத்தின் நோக்கமும் ஆகும்! அதாவது அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையான முகப்புரையில் வலியுறுத்தப்படும் சமூகநீதிக்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாக தலைமை நீதிபதி அவர்கள் வற்புறுத்தியிருப்பது காலத்தின் கட்டாயமாகும்; அரசியல் சட்டத்தின் நோக்கமும் ஆகும்.

 

மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கடிதம்!

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளை நிரப்பிடும்போது மத்திய அரசின் சட்டத் துறை அமைச்சகம் சமூகநீதிக்கு முன்னுரிமை தந்து, ஷெட்யூல்டு காஸ்ட், ஷெட்யூல்டு டிரைப், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள்(எஸ்சி.,எஸ்டி.,ஓ.பி.சி., மைனாரிட்டி, பெண்கள்) முதலியவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைத் தகுதியுள்ள பலரும் இருக்கும் நிலையில், கவனத்தில் எடுத்துக்கொண்டு, நியமனங்கள் செய்வது அவசியம் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் எழுதிய கடிதத்திற்கு 15/01/2021 அன்று அவருக்கு எழுதியுள்ள பதில் கடிதத்திலும் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

சமூகப் பன்முகத்தன்மையை உறுதி செய்திட...

‘‘உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மைக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை அனுப்பும்போது, ஷெல்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகிய பிரிவினரில் தகுதியானவர்களும் இடம் பெற உரிய கவனம் செலுத்தி, சமூகப் பன்முகத்தன்மையை உறுதி செய்திட நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது’’ என மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் தனது 15/01/2021 தேதியிட்ட பதில் கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

இரு முக்கிய துறைகளும் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளன!

இந்த உறுதிமொழியின்படியும், தலைமை நீதிபதியின் கருத்துப்படியும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை சட்டத்துறையும், உச்சநீதிமன்றமும், இரு முக்கிய துறைகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன.

 

உச்சநீதிமன்றத்தில் நடைமுறையில் கடந்த பல ஆண்டுகளாக எஸ்.டி., என்ற பழங்குடி சமூகத்தினைச் சார்ந்த நீதிபதிகளே கிடையாது.

 

அதுபோலவே பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தும் நீதிபதியே இல்லை. எஸ்.சி.,யில் ஒரே ஒரு நீதிபதி கடந்த ஓராண்டில், ஒரே ஒருவர் இருக்கும் நிலை! இவை தவிர மற்ற அத்துணை பேரும் முன்னேறிய வகுப்பினர் என்ற நிலைதானே உள்ளது. இதை சரி செய்து கொடுத்த வாக்குறுதிப்படி இனி நிரப்பக் கூடிய ஏழு இடங்களில், வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மைனாரிட்டி, பெண்களுக்கான நியமனங்களைச் செய்வதுதானே உண்மையான சமூகநீதி வழங்குவதாகும்!

 

அதேபோல, 430 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில், பல உயர்நீதிமன்றங்களும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மைனாரிட்டி, பெண்கள் நியமனம் போதுமான அளவில்  (Adequate representation) இல்லாத நிலையை மாற்றி அமைக்கவேண்டியது நீதி பரிபாலனக் கண்ணோட்டத்திலும் சரி, சமூகநீதியை செயல்படுத்தும் வகையிலும் சரி, செய்யப்பட வேண்டியதல்லவா? மக்கள் பிரதிநிதிகள் சட்டங்களை இயற்றினாலும், இறுதி முடிவினை நீதிமன்றங்கள்தானே, குறிப்பாக உச்சநீதிமன்றம்தானே முடிவு செய்யும் நிலை உள்ளது!

 

சமூகப் பன்முகத்தன்மைக்கு வாய்ப்பளிப்பதன் மூலம்தானே...

அங்கே, Social Diversity - சமூகப் பன்முகத்தன்மைக்கு வாய்ப்பளிப்பதன் மூலம்தானே மக்களுக்கு மன நிறைவு தரக்கூடிய நீதி பரிபாலனம் அமைய வாய்ப்பு ஏற்படும். இதனை நாட்டில் சமூகநீதிக்குக் குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய பிரச்சினையாக எடுத்து உரிய முறையில் மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு சென்று, ஒரு தீர்வு கண்டு நீதித்துறையின் தேக்கத்தை பைசலாகாத வழக்குகளை பைசல் செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்த உடனடியாக முன்வரவேண்டியது அவசரம் அவசியம் ஆகும்!". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.