ADVERTISEMENT

இணையதள வசதிகள் இருந்தால் போதும் வழக்குகளின் முழு விவரங்களை அறியலாம்!

11:23 AM Mar 13, 2019 | Anonymous (not verified)

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை ஒருங்கிணைத்துள்ளது மத்திய சட்டத்துறை அமைச்சகம். இதன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றமும் ஒருங்கிணைக்கப்பட்டு இதற்காக ஒரு புதிய இணையதளம் மற்றும் மொபைல் செயலியை மத்திய சட்ட அமைச்சகம் வெளியீட்டுள்ளது. இந்த இணையதள முகவரி: ecourts.gov.in மற்றும் e-Courts Services மொபைல் செயலியை (Mobile Application) 24×7 பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் , தாலுகாவில் உள்ள நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் (e - District Courts , High Courts, Taluk Courts) இணைக்கப்பட்டுள்ளது என்பது பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வழக்குகளின் விவரங்கள் மற்றும் எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வருகிறது தொடர்பான விவரங்கள் பெற முடியும். மேலும் வழக்குகள் முடிக்கப்பட்டுவிட்டால் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி மக்கள் எளிதாக தீர்ப்பின் நகலை பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பாமர மக்களுக்கு இந்த இணையதள வசதியின் மூலம் நேரம் சேமிக்க முடியும் மற்றும் அலைச்சல் குறையும். எந்த நேரமும் இந்த இணையதளத்திற்கு சென்று வழக்குகளின் விவரங்களை அறிய முடியும் என்பது இந்த இணையதளத்தின் மற்றொரு சிறப்பம்சங்கள் ஆகும். FIR NUMBER மற்றும் District Name , Date of case filling , வழக்கறிஞரின் பெயர்கள் , CNR NUMBER , Registration Number போன்றவை குறிப்பிட்டால் வழக்கு தொடர்ந்தவர்கள் பெயர்கள் மற்றும் கேவியட் மனு செய்தவர்களின் விவரங்களை எளிதில் அறியலாம். மக்களிடம் "Android Mobile" மற்றும் "Internet" இருந்தால் நிமிடத்தில் வழக்குகளின் தகவல்களை அறியலாம். மேலும் இந்த மொபைல் செயலியில் "GPS" option -ம் உள்ளது. "Google Maps" உதவியுடன் நீதிமன்றம் எந்த பகுதியில் உள்ள என்பது தொடர்பான முழு விவரங்கள் "e-Courts Services" செயலியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

நீதிமன்றம் தொடர்பான அனைத்து விளக்கங்கள் மற்றும் ஆவணங்களை எளிதாக பெறலாம். அனைத்து வழக்குக்களும் நீதித்துறை இணையதள சேவையில் பதிந்துள்ளது என்பது ஜனநாயகத்தையும் , இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலும் உயிர் ஊட்டுவதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் மிக விரைவாக தீர்ப்புகள் வழங்குவதற்கும் இந்த இணையதளம் உதவியாக இருக்கும். இதன் மூலம் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. இந்திய இளைஞர்கள் இந்த செயலியின் உள்ள விளக்கத்தை கிராமம் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மக்கள் அனைவருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.


பி . சந்தோஷ் , சேலம்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT