Case related to Endhiran comics; Discount as not suitable for trial

Advertisment

நடிகர் ரஜினி நடிப்பில் எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என கூறி, இயக்குனர் சங்கருக்கு எதிராக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இயக்குநர் சங்கர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட மனு தள்ளுபடி ஆன நிலையில், எந்திரன் வழக்கு சூடு பிடித்திருக்கிறது. இந்த நிலையில் எழுத்தாளர் தமிழ்நாடன் தரப்புஎந்திரன் படத்தின் குறுந்தகடை கூடுதல் ஆவணமாக சேர்ப்பதற்கு மனு அளித்துள்ளது. உயர்நீதிமன்றமோ வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் இந்த வழக்கில் கூடுதல் ஆவணம் எதையும் தாக்கல் செய்ய முடியாது என்று அவரது மனுவை ஏற்க மறுத்தது. இதைத் தொடர்ந்து எந்திரன் கதைத் திருட்டு வழக்கில்சென்னை உயர்நீதிமன்றத்தில் விறுவிறுப்பான விசாரணை காட்சிகள் அரங்கேறியிருக்கிறது. இந்த முறையாவது நீதிமன்றத்தின் அழைப்பின்போது இயக்குநர் சங்கர் நீதிமன்றத்தை மதித்து ஆஜராவாரா? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.