ADVERTISEMENT

வக்போர்டு நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்படத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் மதுரை கிளை

11:19 AM Nov 13, 2019 | rajavel



நெல்லை கடையநல்லூர் பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், வக்போர்டு உறுப்பினருமான கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு வக்போர்டில் 11 உறுப்பினர்கள் இருந்தனர். வக்போர்டில் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அன்வர்ராஜாவால் ஏற்பட்ட காலி இடத்துக்கு மற்றொரு எம்பியை நியமித்தால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ADVERTISEMENT


இந்நிலையில் வக்போர்டு உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் சிராஜூதீன் ராஜினாமா செய்துள்ளார். இதனால் தற்போது வக்போர்டில் 2 உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த இடங்களில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, மாநிலங்களவை உறுப்பினர் முகமதுஜான் ஆகியோரை நியமிக்கலாம். அதற்கு நடவடிக்கை எடுக்காமல் வாக்போர்டு நிர்வாகக்குழுவை கலைத்து, வக்போர்டுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT



இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில் வக்போர்டு நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டார்.


இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்போர்டு நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்படத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT