ADVERTISEMENT

தர்பார் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு! -லைக்கா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு!

10:47 AM Jan 03, 2020 | kalaimohan

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்திற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9 -ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தப் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்திடம் இருந்து, மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாகத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்தத் தொகையை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாய் தங்களுக்கு லைக்கா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்தத் தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த விடுமுறைகால நீதிமன்றம், ஜனவரி 2 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க லைக்கா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இன்று பதில் மனு தாக்கல் செய்வதாகக் கூறி லைக்கா நிறுவனம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT