சர்கார் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ‘’தர்பார்’’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இது ரஜினிகாந்த் நடிக்கும் 167வது படம். பாண்டியன் படத்திற்கு பிறகு இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ரஜினி.
பேட்ட படத்தை தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். தளபதி படத்திற்கு பிறகு சந்தோஷ்சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சந்திரமுகி படத்திற்கு ரஜினியுடன் இப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
2020 பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் தர்பார் படத்தில் போலீஸ், சமூக சேவகர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். தர்பார் படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று மும்பை செல்கிறார் ரஜினிகாந்த்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tharbar.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)