ADVERTISEMENT

"கேர்லஸ் முனுசாமி!" - ஃப்ளக்ஸ் பேனரால் வெடித்த சர்ச்சை... கலாய்க்கும் நெட்டிசன்கள்!  

12:15 PM Apr 01, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சரின் உண்ணாவிரதப் போராட்ட நிகழ்வில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர், சோசியல் மீடியாக்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் சிப்காட் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்காக, சூளகிரி அருகே உள்ள அயரனப்பள்ளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் மூவாயிர ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 01- ஆம் தேதியான இன்று, தனியொருவராக, கே.பி. முனுசாமி போராட்டக் களத்தில் குதித்துள்ளார்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.-வுமான கே.பி.முனுசாமி, சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தனிநபராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இது ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் என்றபோதும், இவர் மட்டுமே மேடையில் இருந்தது பலரையும் வியப்பில் தள்ளியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்துள்ளனர். பிறகு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலை 07.00 மணிக்கே போராட்டத்தைத் துவங்கிய கே.பி.முனுசாமி, மேடையில் விரிக்கப்பட்டுள்ள ஜமுக்காளத்தில் தனியொருவராக அமர்ந்திருந்தார். அவருக்கு பின்னர் ஒரு ப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், அந்த ப்ளக்ஸ் பேனர்தான் இப்போது நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. அப்படி என்ன அதில் இருக்கிறது. அவருக்கு பின்னால் உள்ள ஃப்ளக்ஸில், "5000 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலத்தை, தொழிற்சாலை அமைக்கின்றோம் என்ற பெயரில், விவசாயிகளின் நிலத்தை பறிக்காதே.. மாநில அரசே பறிக்காதே" என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இதைத்தான் நெட்டிசன்கள் அண்டர்லைன் போட்டுக்காமித்து கலாய்க்கின்றனர்.

"விவசாயிகளின் நிலத்தை பறிக்காதே.. மாநில அரசே பறிக்காதே" எனும் சொற்றொடரில் உள்ள 'பறிக்காதே' எனும் சொல்லில் உள்ள பிழையை சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர், தொகுதி MLA எனும் பல பொறுப்புகளை வகித்துவரும் கே.பி. முனுசாமிக்கு, வல்லின 'ற' வுக்கும் இடையின 'ர' வுக்கும் உள்ள வித்தியாசம் கூடவா தெரியாமல் போய்விட்டது என புலம்பித் தள்ளுகின்றனர். பட்டப்படிப்பு முடித்துள்ள கேபி முனுசாமி, அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT