ADVERTISEMENT

'ஊக்க மதிப்பெண் வழங்குவதில் தலையிட முடியாது'- உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

05:51 PM Aug 15, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மருத்துவ மேற்படிப்புகளில் சேர அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் திட்டத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு போட்டியிடும் அரசு மருத்துவர்களுக்கு 30% ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என கடந்த 2020 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் குருபரன், சக்திவேல் உள்ளிட்டவர்கள் சென்னை ஒரு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வலா, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 'எந்த மாநிலத்திலும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்கப்படவில்லை. அரசினுடைய இந்த கொள்கை சட்டவிரோதமாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமாகவும் உள்ளது' என வாதங்கள் வைக்கப்பட்டது.

அதற்கு தமிழக அரசு தரப்பில் வழங்கப்பட்ட பதில் வாதத்தில் 'கிராமப்புறங்களில், தொலைதூரப் பகுதிகளில், மலைப்பகுதிகளில் அரசு மருத்துவராக பணியாற்றுபவர்களுக்கு முப்பது சதவீத ஊக்க மதிப்பெண் வழங்கப்படுவதாகவும், அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது எனவும் வாதங்கள் வைக்கப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'தமிழகத்தில் 2,226 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 330 அரசு மருத்துவமனைகளும் உள்ளது. அங்கு அதிக மருத்துவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு அதிகம் எனும் மனுதாரர் தரப்பில் எந்தவித ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என கருத்து தெரிவித்ததோடு, தொலைதூரப் பகுதிகள், கிராமப் பகுதிகள், மலைவாழ் பகுதிகளில் பணியாற்றுவதை ஊக்கப்படுத்தவே ஊக்க மதிப்பெண்ணை தமிழக அரசு வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் கொள்கை முடிவில் எந்த தவறும் இல்லை. இதில் தலையிட முடியாது' என்று மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT