ADVERTISEMENT

டூவீலரில் வழக்கறிஞர் போர்வையில் கஞ்சா கடத்தல் ; உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது!

09:28 AM Aug 30, 2019 | kalaimohan

தமிழகம் முழுவதும் தெருவுக்கு தெருக்கு கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இது குறித்து நக்கீரன் இதழிலும், இணையத்திலும் தொடர்ந்து செய்தி எழுதி வருகிறோம்.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தொடர்ச்சியாக வாகன சோதனை நடத்தி கஞ்சா கும்பலை பிடித்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சியில் டூவிலரில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி கஞ்சா கடத்திய உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

லால்குடி பகுதியில் டூவிலரில் கஞ்சா கடத்துவதாக போலிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் லால்குடி ரவுண்டானாவில் போலிஸ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய பைக்கில் 3 பேர் வந்தவர்களை நிறுத்தி போலிசார் விசாரணை நடத்தினர். அவர்கள் மூன்று பேருமே முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலிசார் டூவிலரை சோதனை செய்தனர். அதில் 30 கஞ்சா பெட்டலங்கள் மறைத்து வைத்திருந்தனர்.

போலிஸ் விசாரணையில் மணக்கால் டான்போஸ்கோ நகரை சேர்ந்த ஆல்வின் ஸ்டேனி ஸ்பன் என்பர் நாமக்கல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். மணக்கால் சூசைபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் டென்னிஸ், மணக்கால் அண்ணா நகரை சேர்ந்த மதன் குமார் என்பவர்கள் என்று தெரிந்தது. டென்னீஸ் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர்கள் கஞ்சா கடத்தி பிடிப்பட்டனர்.

லால்குடி இன்ஸ் முத்துகுமார் மற்றும் போலிசார் ஆல்வீன் ஸ்டெனி ஸ்டீபன், டென்னீஸ், மதன்குமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT