ADVERTISEMENT

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள, சிறையில் விளைந்த கரும்புகள்..! 

03:51 PM Jan 08, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


திருச்சி மத்திய சிறையின் வளாகத்தில் அமைந்துள்ள சிறைத் தோட்டத்தில் 24 ஏக்கரில் மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா போன்ற மரங்களும், தக்காளி, கத்தரிக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதில், கமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரும்பு பயிரிடும் பணி திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் கனகராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.


வரும் 14ஆம் தேதி கொண்டாப்பட இருக்கும் பொங்கல் பண்டிக்கைக்காக இன்று (08/01/2021), கரும்பு அறுவடை செய்யும் பணி தொடங்கப்பட்டது. சிறைவாசிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களின் நலன் கருதியும் மொத்தமாகவும், சில்லரையாகவும் கரும்புகளைச் சிறையின் வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட சிறை அங்கன்வாடியில், கரும்பு விற்பனை செய்வது இது மூன்றாம் முறையாகும். தொடர்ந்து 2017, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் திருச்சி மத்திய சிறையின் தோட்டத்தில் கரும்பு பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT