ADVERTISEMENT

பேருந்தில் 2000 ரூபாய் நோட்டுகளை நடத்துநர்கள் பெறலாமா? - தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம்

06:54 PM May 22, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. நேற்றைய தினம் திருநெல்வேலி உட்பட சில போக்குவரத்து கோட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பணிமனைகளின் சார்பில் போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடமிருந்து வாங்க வேண்டாம், அப்படி வாங்கும் பொழுது அந்த நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து மாற்று ரூபாய் தாள்களாக மாற்றுவதில் சிக்கல் இருப்பதால் பயணிகளிடம் பக்குவமாக இது குறித்து எடுத்துக் கூறி இடையூறு ஏற்படாமல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை தவிர்க்குமாறு கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்துத் துறை சார்பில் அதிகாரப்பூர்வமான விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பேருந்தில் பயணிக்கக் கூடிய பயணிகளிடம் 2000 ரூபாய் தாள்களை பெறுவதற்கு நடத்துநர்களுக்கு எந்த தடையும் இல்லை. எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் தாளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT