2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்தியரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும்.டெபாசிட்மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்துசெப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்குரிசர்வ்வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் உரிய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ்வங்கி அதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. 2000 ரூபாயை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் வரிசையில்நிற்கபந்தல் அமைக்க வேண்டும்,அவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தரிசர்வ்வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ், 'செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருப்பதால்அவசரப்படத்தேவை இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணியில் ஏற்படும் சிக்கல்களை நீக்கரிசர்வ்வங்கி உரிய நடவடிக்கைகளை எடுக்கும்' எனதெரிவித்துள்ளார்.
.