ADVERTISEMENT

இன்று மாலை 6 மணி முதல் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

05:25 PM Jul 15, 2020 | kalaimohan

ADVERTISEMENT

பொறியியல் படிப்புகளுக்கு இன்று மாலை முதல் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பொறியியல் படிப்புகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். சான்றிதழ் சரிபார்க்க முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேரில் வர வேண்டாம். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். செப்டம்பர் 17ஆம் தேதி முதல் பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும். www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்காக 52 உதவி மையங்கள் அமைக்கப்படும். அக்டோபர் 15ம் தேதிக்குள் கலந்தாய்வு நடைமுறைகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும் நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பொறியியல் சேர்க்கை குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும், தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளன. மொத்த இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கல்லூரிகள் கரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக இருப்பதால் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை எனவே பின்னர் அறிவிக்கப்படும். கலை, அறிவியல் படிப்புகள் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தகவல்கள் தெரிவிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT