ADVERTISEMENT

சிஏஏ தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை!

04:58 PM Mar 14, 2020 | Anonymous (not verified)

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத பாகுபாட்டால் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் மத அடிப்படையில் நாட்டைப் பிளவு படுத்துவதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தப் போராட்டங்களை இஸ்லாமிய அமைப்புகள் அதிகமாக முன்னெடுப்பதால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை களைவதற்காகவும் அவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும் 43 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இஸ்லாமிய தலைவர்கள் பலர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். இதோபோல் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனையில் டிஜிபி, காவல் ஆணையர், ஹஜ் கமிட்டியின் அபுபக்கர், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT