ADVERTISEMENT

எடப்பாடி அரசே... "பனை "வளத்துறை அமைச்சகம் ஏற்படுத்து... -"கள்" இயக்கம் கோரிக்கை

12:39 PM Jan 08, 2020 | rajavel

ADVERTISEMENT

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவருமான செ. நல்லசாமி சத்தியமங்கலத்தில் விவசாயிகளை சந்தித்து மரத்திலிருந்து கள் இறக்குவது பற்றி ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT


பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தன்னை ஒரு விவசாயி என்று சொல்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நீக்க வேண்டும். இத்தடையை நீக்க கோரி கள் இயக்கம் சார்பில் வரும் 21 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மரங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே உடனடியாக கள் இறக்க அனுமதி கொடுத்து தென்னை விவசாயிகளை காக்க அரசு முன்வரவேண்டும்.


இதேபோல் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் இரண்டாம் போகத்திற்கு நிலக்கடலை மற்றும் எள் பயிரிட 1 இலட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களுக்கு ஜனவரி முதல் அல்லது 2 வது வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். இதற்கான தண்ணீர் திறப்பு தேதியை முன்னதாக அறிவிப்பது வழக்கம். இந்தாண்டு இதுவரையிலும் தண்ணீர் திறப்பு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகாததால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள், இடுபொருட்கள், உரங்கள் உள்ளிட்டவை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே உடனடியாக தண்ணீர் திறப்பு தேதியை இந்த அரசு அறிக்க வேண்டும் என்பது கீழ்பவானி பாசன விவசாயிகளின் கோரிக்கை.

தமிழக அரசில் பால்வளத்துறை, மீன்வளத்துறை என தனியாக துறைகள் ஏற்படுத்தப்பட்டது போல் பனைவளத்துறை ஏற்படுத்த வேண்டும். இத்துறைக்கு தனியாக அமைச்சர் ஒருவரை நிர்ணயிக்க வேண்டும். பனைபொருட்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத்தொடங்கிவிட்டதால் பனைமரங்களை காப்பது அரசின் கடமை. எனவே உடனடியாக பனைவளத்துறை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT