ADVERTISEMENT

இறக்கி விடமாட்டேன் என கூறிய கண்டக்டர்... பழிவாங்கிய பயணி... சுவாரஸ்ய சம்பவம்...!

03:08 PM Jan 31, 2020 | Anonymous (not verified)

கடந்த ஜனவரி 12, 2020 அன்று சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று கிளம்பி உள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்த ஒரு பத்துப் பேர் சேலத்தில் இந்த பஸ்ஸில் ஏறி உள்ளனர்.அவர்கள் அரசூருக்கு டிக்கெட் தருமாறு கேட்டுள்ளனர். அந்த கண்டக்டர் அரசு பஸ் நிற்காது உளுந்தூர்பேட்டை அதைவிட்டால் விழுப்புரம் இங்குதான் நிற்கும். எனவே உளுந்தூர்பேட்டையில் இறங்கி கொள்ளுங்கள் என்று டிக்கெட் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



அந்த பயணிகள் அந்த விடிகாலை மூன்று மூன்றரை மணியளவில் உளுந்தூர்பேட்டையில் பஸ் நிலையத்தில் இறங்கியுள்ளனர். அப்போது கண்டக்டர் பசுவின் முன்பகுதியில் வைத்திருந்த பயணிகளுக்கு கொடுக்கவேண்டிய டிக்கெட் பண்ட் ஒரு பையில் இருந்து உள்ளது. அதை உளுந்தூர்பேட்டையில் கீழே இறங்கிய பயணிகள் தெரிந்தோ தெரியாமலோ எடுத்து சென்றுவிட்டனர். இப்போது அவர் பணி செய்யும் சேலம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இந்த டிக்கெட் பண்டின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய், இந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை கட்ட வேண்டும், இல்லையேல் அந்த டிக்கெட்டுகளை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இப்போது அந்த நடத்துனர் டிக்கெட் பண்டலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இதில் ஒரு வினோதம் என்னவென்றால் இரவு நேரங்களில் தொலை தூரங்களில் ஏறும் பஸ் பயணிகள் இரவு நேரம் என்பதால் தங்கள் இறங்கவேண்டிய பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடுமாறு கூறினால் பஸ் நடத்துனர்கள் டிரைவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எக்ஸ்பிரஸ் பஸ் சூப்பர்டீலக்ஸ் இவையெல்லாம் அங்கு நிற்காது என்று மறுத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட செயல்களால் பயணிகள் இரவு நேரங்களில் தங்கள் ஊருக்கு சென்று சேர்வதில் பயமும் பாதுகாப்பும் இல்லாத நிலையில் அந்த கோபத்தின் காரணமாக கூட இதுபோன்ற செயல்கள் செய்து இருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT