ADVERTISEMENT

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய தம்பி ஓ.ராஜாவை கட்சியிலிருந்து ஓரங்கட்டிய அண்ணன் ஓபிஎஸ்! பின்னணி தகவல்கள்!!

08:12 AM Dec 20, 2018 | sakthivel.m

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரிய குளத்திலேயே ஓபிஎஸ்சின் உடன் பிறந்த சகோதரான ஓ.ராஜாவும் குடியிருந்து வருகிறார். கடந்த ஜெ ஆட்சியின் போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஓ.ராஜா தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓ.ராஜா தனக்கென்று ஒரு கோஷ்டி உருவாக்கி கொண்டு அரசியல் நடத்தி வந்தார். இந்த நிலையில்தான் ஒபிஎஸ்சை ஜெ ஓரம்கட்டிய போது ராஜாவிடம் இருக்கும் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லி வலியுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் ராஜாவும் நகர்மன்ற தலைவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விஷயம் வெளியே தெரியாத அளவுக்கு அப்பொழுதே மூடி மறைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதன்பின் ஓ ராஜாவும் நகர்மன்றம் பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தவர் அவ்வப்போது கல்லுப்பட்டி பூசாரி நாகமுத்து கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ஓராஜா சேர்க்கப்பட்டு இருந்ததால் அந்த வழக்குக்காக பெரியகுளம், திண்டுக்கல் கோர்ட்டுக்கு போய் வந்து கொண்டு தனக்கென ஒரு குழுவை உருவாக்கி கொண்டு அரசியல் நடத்தி வந்தார்.

இந்த நிலையில்தான் ஜெ மறைவுக்கு பின் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதன் பின் மீண்டும் இபிஎஸ் அணியில் சேர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் வந்தவுடனே மீண்டும் ஓ.ராஜா மாவட்டத்தில் அரசியல் நடத்த ஆரம்பித்தார்.

அதன் அடிப்படையில்தான் ஒ.ராஜா மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை உசிப்பிவிட்டு சில பகுதிகளில் மணல் எடுக்க சொல்லி அதை மறைமுகமாக விற்க வைத்துவந்தார். இந்த விஷயம் டிடிவி அணியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் காதுக்கு எட்டியதின் பேரில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் தங்க தமிழ்ச்செல்வன் ஓபிஎஸ் தம்பி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் பல்லவியூம் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் தம்பியின் ஆதரவாளர்கள் என்று கூட பார்க்காமல் மணல் கடத்தல் கும்பலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து வந்தார். இதனால் ஓபிஎஸ் தம்பி ஒரு.ராஜாவும் அவருடைய ஆதரவாளர்களும் கலெக்டர் மேல் பெரும் அதிர்ப்தியில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில்தான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு கூட்டுறவு சங்க இயக்குனருக்கான தேர்தலில் ஓ ராஜா தனது அண்ணன் ஓபிஎஸ் தொகுதியான போடி பகுதியில் போட்டியிட்டு இயக்குனரானார். அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆவின் தலைவராக போட்டிபோட இருந்தார். ஆனால் தலைவர் பதவிக்கு வழக்கு கோர்ட்டில் இருந்ததால் தலைவர் பதவி நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில்தான் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தேர்தலில் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைகண்டு கட்சிபொருப்பாளராகளும்,.ஆதரவாளர்களும் ஒ.ராஜாவுக்கு மாலை சால்வை போட்டு வாழ்த்தினார்கள் காலையில். ஆனால் மாலையில் தலைவரான ஒரு.ராஜா கட்சிகட்டுப்பாட்டை மீறியதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அண்ணனும்மான ஒபிஎஸ்சும்.துணைஒருங்கிணைப்பாளருமான இபிஎஸ்சும் கட்சிஅடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டனர்.

ஆனால் ஓ.பி.எஸ்சின் தம்பி ஓ.ராஜாவுக்குநீண்ட நாள் கனவாக இருப்பது மதுரை ஆவின் தலைவர் பதவி இதனை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு விசயங்களை செய்துவந்த ஓ.ராஜாவிற்கு எதிராக, தேனியைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றமும் நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில்தான் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தலைவர், துணைத்தலைவர்களின் எண்ணிகையை விட அதிகமாக இல்லாத நிலையில், ஓ.ராஜா தலைவராகவும், கே.சி.தங்கராஜன் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பிற்குப் பின்னால், பெரும் அரசியலில் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா ஈடுபட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்தே அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ஓ.ராஜா மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல மதுரையை மையமாக கொண்ட அமைச்சர்களின் ஆதரவாளர்கள் தயாரானதை அறிந்தே ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும், வருவாய்துறை அமைச்சருக்கும் ஓ.ராஜா ஆவின் தலைவராவது பிடிக்கவில்லை என்ற பேச்சும் மதுரை ரா.ரா.க்கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் தான் மதுரையில் இருந்து தலைமைக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஓ.ராஜா நீக்கப்பட்டிருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த நீக்கமே இபிஎஸ்சின் அழுத்ததால் தான் அண்ணன் ஓ.பி.எஸ்சும் தம்பி ஒ.ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறாரே தவிர மனதார நீக்க வில்லை காலையில் கூட அண்ணன் ஒபிஎஸ்சிடம் ஒ.ராஜா போன் மூலம் தலைவரான விஷயத்தை சொல்லி வாழ்த்துபெற்று இருக்கிறார். அதன் பின் நடந்த இபிஎஸ்சின் அரசியல் சூழ்ச்சி மூலம் ஓ.ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள் என்ற பேச்சு தேனி மாவட்டத்தில் உள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT