ADVERTISEMENT

அண்ணியை கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கொழுந்தன்

10:09 AM Aug 27, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, பட்டத்தால் தம்பதியினர். இவர்களுக்கு முருகேசன், ரவி. வெங்கடேசன், காசிநாதன் ,ஆகிய நான்கு மகன்களும் மகாலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இதில் வெங்கடேசன்(38) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்த போது செஞ்சியை சேர்ந்த பிரேமலதா(28) தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் பிரேமலதாவை திருமணம் செய்த வெங்கடேஷ் தனது சொந்த ஊரான கல்லூருக்கு அழைத்து வந்து வசித்து வந்தனர்.வெங்கடேசன் கூலி வேலைக்கு சென்று வருவதும் அவ்வப்போது சென்னைக்கு சென்று வேலை செய்துவிட்டு வருவதும் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜூன் 10ஆம் தேதி வெங்கடேசன் மனைவி பிரமலதாவுக்கு ஆவெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.ஆனால் குழந்தை 8 மாதத்தில் குறை பிரசவத்தால் பிறந்ததால் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி குழந்தை இறந்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்த வெங்கடேசன் சொந்த ஊரில் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த வேலை காரணமாக வெங்கடேசன் மனைவி பிரேமலதாவை வீட்டில் விட்டுவிட்டு சென்னை சென்று உள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு வெங்கடேசனின் வீட்டுக்கு மது போதையில் வந்த அவரது கடைசி தம்பி காசிநாதன் (35) திடீரென்று பிரேமலதாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகம் கழுத்து கை என்ற பத்து இடங்களில் வெட்டி உள்ளார்.இதில் பிரேமலதா கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதை பார்த்த காசிநாதன் அங்கிருந்து தப்பி ஓடி ராமநத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிரேமலதாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேமலதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேமலதா உடலை உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராவணத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்த காசிநாதனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காசிநாதன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வேப்பூர் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமத்தில் வசித்து வரும் காசிநாதனுக்கு அவருடைய அண்ணன் வெங்கடேசன் அவ்வப்போது பண உதவி செய்து வந்துள்ளார். தற்பொழுது வெங்கடேசன் திருமணம் ஆனதிலிருந்து பண உதவி செய்வது குறைந்து போனது. அண்ணன் மனைவி பிரேமலதா வந்ததிலிருந்து அண்ணன் வெங்கடேசன் மாறிவிட்டார் என்ற கடும் கோபத்தில் இருந்த காசிநாதன் அண்ணன் வெங்கடேசன் சென்னை சென்ற தகவல் அறிந்து அண்ணன் மனைவி பிரேமலதாக தனியாக இருந்தபோது கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ராமநத்தம் போலீசார் இந்த கொலை சொத்து தகராறு காரணமாக, பணம் பிரச்சனை காரணமா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் மனைவியை கொழுந்தன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT