ADVERTISEMENT

தவறான செயல்; மன்னிப்பு கேட்ட பிரதமர் - அபராதம் விதித்த போலீஸ் 

07:40 AM Jan 22, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு போலீஸ் ரூ. 50,000 அபராதம் விதித்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இங்கிலாந்து பிரதமருமான ரிஷி சுனக் நாட்டின் புதிய திட்டங்கள் குறித்து மக்களிடையே சமூக ஊடகங்களின் மூலம் விளம்பரப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் ரிஷி சுனக் காரில் பயணித்தபடி கேமிராவை பார்த்து பேசுவது போன்று இருந்தது. அப்போது அவரது கார் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது இருக்கையின் பெல்ட்டை அணியாமல் பேசி வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நாட்டின் பிரதமர் காரில் செல்லும்போது சீட் பெல்ட் போடாமல் இருப்பதா என பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்கு பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் ரிஷி சுனக் காரில் செல்லும்போது 'சீட் பெல்ட்' அணியாதது தவறான செயல். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்காக பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 500 பவுண்ட்(ரூ.50,000)) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT