ADVERTISEMENT

ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

08:01 PM Aug 01, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிசு மரணங்களைக் குறைக்க, ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த குழந்தைகள் உருவாக, மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதைத் தடுக்க தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும், தாய்ப்பால் புகட்டுவதால் ஏற்படும் நன்மைகளையும் வழங்காததால் ஏற்படும் குறைபாடு குறித்தும் சமுதாயக் கூடங்கள், தாய்ப்பால் புகட்டும் பெண்கள், பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செவிலியர், மாணவர்கள் வாயிலாக விழிப்புணர்வு வழங்கப்படுவது வழக்கம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, தாய் சேய் நல விடுதிகள், சத்துணவு மையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும்.

இந்நிலையில் 'தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும், புத்திக் கூர்மையும் கிடைக்கும். தாய்- சேய்க்குள் ஆரோக்கியமான உறவு வளரும். தாய்ப்பால் புகட்டாத குழந்தைகள் நோய் வாய்ப்பட்டு இறப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. 7-ந் தேதி வரை தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்' என ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரம்) சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT