ADVERTISEMENT

“அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்” - தமிழக அரசு

12:58 PM Oct 13, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அனைத்து பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகத் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவுபடுத்தினார்.

இந்த நிலையில் கடலோரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், காலை உணவுத் திட்டத்தை அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாது அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிதிநிலை அறிக்கையைப் பொறுத்து திட்டத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை முடித்து வைத்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT